முதியவர் தூக்கிட்டு தற்கொலை
கூடலூரில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை - காவல்துறையினர் விசாரணை;
By : King 24x7 Angel
Update: 2024-02-23 04:32 GMT
முதியவர் தூக்கிட்டு தற்கொலை
தேனி மாவட்டம் கூடலூரில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை. கூடலூர் நகராட்சியில் அங்கம் வகித்து வரும் நடு ரைஸ்மில் தெருவை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் கனி என்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.