இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
முதியவர் மீது வாகனத்தை மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகன ஓட்டியை போலீசார் தேடி வருகின்றனர்
By : King 24x7 Website
Update: 2023-12-24 17:10 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள தெற்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் வயது 37 .விவசாய பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்தி வருகிறார் .. இவருடைய தந்தை அர்ஜுனன் வயது 63 . சனிக்கிழமை அன்று மாலை பள்ளிபாளையம் சங்ககிரி மெயின் ரோட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது சங்ககிரியில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஒருவர் அர்ஜுனன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து இது குறித்து அர்ஜுனன் மகன் குணசேகரன் நடித்த புகாரின் அடிப்படையில் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டி குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்...