பஸ் நிலையத்தில் முதியவர் உடல்
விராலிமலை பேருந்து நிலையத்தில் உயிரிழந்த முதியவரின் உடலை குடும்பத்தினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
Update: 2024-01-27 11:33 GMT
விராலிமலை புதிய பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டம் அறையில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஜீவநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விஏஓ மற்றும் போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்த நபர் திருச்சி மாவட்டம் சின்னம் பளம்ப்பட்டியை சேர்ந்த சேகர் என்பதும், குடும்ப பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி விராலிமலை பகுதியில் வசித்து வந்ததும், சில நாட்களாக பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையிலேயே தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சேகர் உடலை அவரது குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.