பூந்தமல்லி பஸ் நிலையத்தில் அரசு பஸ் மோதி மூதாட்டி பலி !
பூந்தமல்லி பஸ் நிலையத்தில் அரசு பஸ் மோதி மூதாட்டி பலி - போலீசார் அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-11 12:12 GMT
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் ரேவதி(52), இவருடன் இவரது தாயார் செல்லம்மாள்(80), என்பவரும் வசித்து வந்தார். செல்லம்மாவின் மற்றொரு மகள் மாரியம்மாள் என்பவர் பூந்தமல்லி அடுத்த சித்துக்காட்டில் வசித்து வருகிறார். சில நாட்கள் சித்துக்காட்டில் உள்ள மகளை பார்ப்பதற்காக செல்லம்மாள் சென்று வருவது வழக்கம். அதேபோல் நேற்று சித்துக்காட்டில் உள்ள மகளை பார்ப்பதற்காக செல்லம்மாள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது பூந்தமல்லியில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற அரசு பேருந்து பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்த போது செல்லம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லம்மாள் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லம்மாள் இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.