நெஞ்சு வலியால் அவதிப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு !

நெஞ்சு வலியால் அவதிப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-02-23 09:49 GMT
கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, வெள்ளாளப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மனைவி ராசம்மாள் வயது 69. இவருக்கு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டதால், உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கரூர் திண்ணப்பா தியேட்டர் அருகே உள்ள ரத்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த ராசம்மாள் சிகிச்சை பலன் இன்றி பிப்ரவரி 21 இல் உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ராசம்மாவின் மகன் கணேசன் வயது 52 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த ராசம்மாளின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Tags:    

Similar News