ஒலிம்பியாட் - வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டிய அமைச்சர்
Update: 2023-11-29 07:11 GMT
மதுரையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ப்ரைனி பாப்ஸ் இன்டர்நேஷனல் அட்வான்ஸ் அபாகஸ் கல்வி நிறுவனம், கடந்த இரண்டு மாதங்களாக 3 வயது முதல் 15வயயதுள்ள 1200க்கும் மேற்பட்ட தமிழகம், உள்பட இந்தியாவின் மற்ற 6 மாநிலங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் பங்கேற்ற ஒலிம்பியாட் என்னும் போட்டியில் வெற்றிபெற்றது. இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களை திருச்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினார் . இதில் நாலு மற்றும் ஐந்து வயது குழந்தைகள் 25 வயது வரிசை கணக்குகளை எந்த உபகரணமும் இல்லாமல் அபாகஸ் மனக்கணக்கு முறையில் செய்து காட்டினார்கள். இந்நிகழ்வை பிரைனி பாப்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் ஜெயப்பிரியா மற்றும் ஜோதிபாசு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்