ஓமலூர்: ரூ.5.37 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.537 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

Update: 2024-05-14 10:37 GMT

கொப்பரை ஏலம்

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய அளவிலான மின்னணு கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், 52 வகையான எண்ணெய் பிழிதிறன் கொண்ட 6,206 கிலோ கொப்பரையை 22 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் 4 வியாபாரிகள் மொத்த கொப்பரையும் ரூ.5 லட்சத்து 37 ஆயிரத்து 171க்கு வாங்கினர்.

ஓமலூரில் கடந்த 2 வாரமாக கொப்பரை விலை குறைந்து விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்தில், கிலோவிற்கு 2 ரூபாய் விலை உயர்ந்தது. கடந்த வாரம் கிலோ 890.99 காசுக்கு விற்பனையான கொப்பரை, ரூ.792.99 காசுக்கும், குறைந்தபட்ச விலையிலும் 77 வரை விலை உயர்ந்து ரூ.567.27க்கும், சராசரி விலையாக ரூ.789.09க்கும் விற்பனையானது. கொப்பரை விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News