சாலை தடுப்பில் ஆம்னி பஸ் மோதல் - 10 பேர் காயம்
விக்கிரவாண்டி அருகே பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பஸ் சாலை தடுப்பில் மோதிய விபத்தில் 10 காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;
Update: 2024-01-28 06:16 GMT
விபத்துக்குள்ளான பேருந்து
பரமக்குடியில் இருந்து 33 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் சென்னைக்கு புறப்பட்டது. பரமக்குடியைச் சேர்ந்த டிரைவர் வீராசாமி பஸ்சை ஓட்டினார். இந்த பஸ் அதிகாலை 4.30 மணி அளவில் விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலை அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ், சாலையின் இடது புறத்தில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி வலது புறம் கவிழ்ந்து சேதமானது. இதில் பஸ்சில் பயணம் செய்த மும்பை மட்டுங்க பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி, மானாமதுரையை சேர்ந்த அஞ் சலிதேவி, டிரைவர் வீராசாமி உள்பட 10 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.