திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆம்னி பேருந்துகள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-22 14:25 GMT
பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்து
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் ஆர்.டி.ஓ சிவகுமார் தலைமையில் வாகன ஆய்வாளர்கள் இரவு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
இதனையடுத்து 3 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.