திருப்பூர் மாநகராட்சி சார்பில் 17 இடங்களில் நேர் மோர் பந்தல் திறப்பு
திருப்பூரில் கோடைகால வெப்பத்தை தணிக்க திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக 17 இடங்களில் நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 15:58 GMT
தண்ணீர் பந்தல் திறப்பு
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகின்ற நாட்களில் வெப்ப அலை காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகரின் முக்கிய இடங்களாக 17 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பகல் நேரங்களில் தண்ணீர் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.