3-ம் நாள் தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் வருகை
நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மாசி பெருந்திருவிழா 3- ஆம் நாள் தீர்த்தம் எடுத்து பக்தர்கள் கொண்டு வந்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-15 09:07 GMT
3-ம் நாள் தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் வருகை
நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மாசி பெருந்திருவிழா 3- ஆம் நாள் தீர்த்தம் எடுத்து பக்தர்கள் கொண்டு வந்தனர். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவின் நிகழ்வாக 3ம் நாளான இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி உள்ளதால் விரதத்தை துவைக்கி உள்ளனர். அம்மனுக்கு நேர்த்தி கடனாக வேண்டுதலையும் வைத்துள்ளனர். பலர் பூக்குழி இறங்குவதற்கு தயாராகி வருகின்றனர். தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாதிக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் கரந்தமடையில் இருந்து அபிஷேக ஆராதனை செய்து நீராடி தீர்த்த குடங்களை கொண்டு வந்தனர்.