மகா சிவராத்திரி: மதுரை மல்லிகை கிலோ ரூ.800க்கு விற்பனை
மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மல்லிகை கிலோ ரூ.800க்கு விற்பனை.
மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மலர் சந்தையில் மதுரை மல்லிகை கிலோ ரூபாய் 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற பூக்களும் கணிசமான விலையேற்றத்துடன் காணப்படுவதாக வியாபாரிகள் கருத்து. மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமன்றி மதுரை மாவட்டங்கள் ஆன திண்டுக்கல் தேனி விருதுநகர் ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
மதுரை மல்லிகை பொருத்தவரை அதன் மணம், தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தனிச்சிறப்பு மிக்க ஒன்றாக திகழ்கிறது. இதன் காரணமாக மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்றுள்ளது. பிற மாவட்டங்கள் மட்டுமன்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் மதுரை மல்லிகை அதன் தனிச்சிறப்பு காரணமாக மதுரையில் இருந்து ஏற்றுமதி ஆகிறது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கு மேலாக பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் நாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலையில் கணிசமான ஏற்றம் காணப்படுகிறது. மதுரை மல்லிகை கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிச்சி ரூ.800, முல்லை ரூ.800, சம்பங்கி ரூ.400, பட்டன் ரோஸ் ரூ.200, பன்னீர் ரோஸ் ரூ.200, சம்பங்கி ரூ.400, செண்டு மல்லி ரூ.80, செவ்வந்தி ரூ.250, அரளி ரூ.400 என விற்பனையாகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த விலையேற்றம் காணப்படுவதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.