ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூபாய் ஒன்றரை லட்சம் பறிமுதல்
கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 1.50 லட்சம் ரூபாயை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-11 06:50 GMT
பணம் பறிமுதல்
திருக்கோவிலுார் பி.டி.ஓ., மோகன்குமார் தலைமையிலான பறக்கும்படையினர், கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புறவழிச்சாலையில் நேற்று மதியம் 1:00 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக ஸ்கூட்டியில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்ததில், 1.50 லட்சம் ரூபாய் எடுத்து வந்தது தெரிந்தது. விசாரணையில், பைக்கில் வந்தவர்கள் மேலுாரை சேர்ந்த மகேஷ்குமார் மனைவி நளினி, 27, என்பது தெரிந்தது. நகை வாங்க பணத்தை எடுத்து செல்வதாக நளினி தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் 1.50 லட்சம் ரூபாயை பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமியிடம் ஒப்படைத்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி, போலீசார் கண்ணன், தேன்மொழி, கனகாம்பரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.