பள்ளி வாகனம் கண்ணாடி உடைப்பு ஒருவர் கைது
தனியார் பள்ளி வாகனத்தின் கண்ணாடியை உடைத்த இளைஞன் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-09 05:19 GMT
பள்ளி வாகனம் கண்ணாடி உடைப்பு ஒருவர் கைது
திருக்கோவிலுார், கீழையூரைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் செந்தில்குமார், 45; தனியார் பள்ளி வாகன ஓட்டுநர். நேற்று முன்தினம் மாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றபோது, திருப்பாலபந்தல் அருகே அதே பகுதியைச்சேர்ந்த வீராசாமி மகன் பாஸ்கர், 35; என்பவர் பைக்கை நிறுத்திவிட்டு அதன் மீது உட்கார்ந்திருந்தார். அவரை டிரைவர் செந்தில்குமார் பைக்கை எடுத்து ஓரமாக செல்லும்படி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த பாஸ்கர், டிரைவருக்கு கொலை மிட்டல் விடுத்து, தடியால் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாஸ்கர் மீது திருப்பாலபந்தல் போலீசார், வழக்குப் பதிந்து கைது செய்தனர்.