கள்ளச்சாராயம் விற்பனை வழக்கில் ஒருவர் கைது !
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை வழக்கில் ஒருவர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-26 04:39 GMT
கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள அரவங்காடு கிராமத்தை சேர்ந்த சின்னையன் மகன் ரமேஷ்குமார்,38; கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் கரியாலுார் போலீசார் இவரை கைது செய்தனர். ரமேஷ்குமார் மீது ஏற்கனவே, பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து சாராய விற்பனை ஈடுபட்டு வந்தார். அதனால், ரமேஷ்குமாரின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,சமய்சிங் மீனா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஷ்ரவன்குமார், சாராய வியாபாரி ரமேஷ்குமாரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி கிளை சிறையில் அடைக்கப்பட்டிரந்த ரமேஷ்குமாரிடம், தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.