இடம் தகராற்றில் ஒருவர் கைது

கள்ளகுறிச்சி மாவட்டம், காட்டுக்கொட்டாய் பகுதியில் இடதகராற்றில் வாலிபரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்தனர்;

Update: 2024-05-15 02:51 GMT

இடதகராற்றில் ஒருவர் கைது

கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்தம், காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் மணி, 38; அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் நடேசன் இருவருக்குமிடையே இடம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் நடேசன், தனது மகன் செல்வராசுடன் சேர்ந்து மணியை தாக்கினார். புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார், நடேசன், செல்வ ராசு ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, செல்வராசு, 40; என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News