பள்ளி மாணவர்களே, நீங்களும் ஒருநாள் கலெக்டர் ஆகலாம் - ஆட்சியர்

திருச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் குறித்து அதிகமாக தகவல்கள் கொடுக்கும் மாணவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியராக ஒரு நாள் பணியில் அமர்த்த படுவார் என போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

Update: 2024-06-23 09:01 GMT

ஆட்சியர் பிரதீப் குமார்

திருச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பதற்கான அனைத்து துறை அதிகாரிகளும் தீவிர சோதனையில் ஈடுபட்டு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் மாணவர்களுடன் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.அதில் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தங்கள் பள்ளி அருகிலோ அல்லது கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்கள் குறித்து அதிகமாக தகவல் கொடுக்கும் மாணவர்கள் ஒரு நாள் திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியில் அமர்த்தப்படுவார். அந்த மாணவருக்கு கீழ் அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் பணிகள் மேற்கொள்வர் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூட்டத்தில் பேசி அறிவித்தார்.
Tags:    

Similar News