பெண்களுக்கான ஒரு நாள் தையல் பயிற்சி

ரோட்டரி கிளப் சார்பில் சேலத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் தையல் பயிற்சி பட்டறையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Update: 2024-02-18 02:58 GMT

தையல் பயிற்சி 

ரோட்டரி கிளப் ஆஃப் ரூபாவதி மற்றும் ரோட்ராக்ட் கிளப் ஆஃப் சேலம் ராயல்ஸ் சார்பில் கருப்பூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான ஒருநாள் தையல் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தையல் கலையில் சாதித்த வல்லுநர்கள் பலர் இதில் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும், அறிவுரைகளையும் எடுத்துரைத்தனர். தொடர்ந்து இந்த பயிற்சி பட்டறையில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Tags:    

Similar News