ஒரு நாள் சிறப்பு கடன் வசதியாக்கல் முகாம் !
மாவட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்குதல் மற்றும் மேம்பாட்டுக்கான ஒரு நாள் சிறப்பு கடன் வசதியாக்கல் முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்து கடனுதவிகளை வழங்கினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-23 11:44 GMT
ஒரு நாள் சிறப்பு கடன் வசதியாக்கல் முகாம் !
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் கன்கரா அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்ட தொழில் மையம் சார்பில், மாவட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்குதல் மற்றும் மேம்பாட்டுக்கான ஒரு நாள் சிறப்பு கடன் வசதியாக்கல் முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் க.சாந்தகுமார் துவக்கி வைத்து கடனுதவிகளை வழங்கினார். ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுத் துறைகள் மூலம் செயல்ப்படுத்தி வரும் பல்வேறு தொழில் மேம்பாட்ற்காக 75 நபருக்கு ரூ. 37.80 கோடி மதிப்பீட்டிகான வங்கி ஒப்பளிப்பு மற்றும் கடனுதவிக்கான ஆணைகளையும் , ஈரோடு மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயன்பெற்ற 32 பயனாளிகளுக்கு ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் மானியத்தினையும் வழங்கினார். முன்னணி வங்கிகளால் சிறு தொழில்கள் முதலீடு மற்றும் வர்த்தக நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் 1,099 நபருக்கு ரூ.350.08 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டது.