ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

மாவட்ட அளவிலான ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது

Update: 2023-12-21 08:22 GMT

மாவட்ட அளவிலான ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொதிகை கல்லூரியில் இளைய செஞ்சிலவ மாவட்டஅளவிலான ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது! திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் செயல்பட்டுவரும் பொதிகை தனியார் கல்லூரியில்இளைய செஞ்சிலவ மாவட்ட அளவிலான ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்முதன்மைக் கல்வி அலுவலர் முனி சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது இந்த பயிற்சி முகாமிற்கு இடைநிலை மாவட்டக் கல்வி அலுவலர் இயற்கை பேரிடர் காலங்களில் துரிதமாக சேவை ஆற்றுவது குறித்தும் தீயணைப்பு உத்திகள் மற்றும் அசாதாரணமான சூழல்களில் செயலாற்றுவதில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் பங்கு குறித்து முன்னிலை உரையாற்றினார். இடைநிலை மாவட்டக் கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளர் தனராஜ் இயற்கை பேரிடர் காலங்களில் உடன் மக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்றுதல் போர்க்களத்தில் மற்றும் விபத்து நேரிடும் நேரத்தில் சேவையாற்றுதல் குறித்தும் பேசினார் மற்றும் பொதிகை பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பிரபாகரன் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை குறித்தும் வாழ்த்துரை வழங்கினர். எலவம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் செல்வகுமார்வரவேற்புரை ஆற்றினார் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பொம்மிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தண்டபாணி . ஆசிரியர் சுப்பிரமணி ஏற்பாடு செய்திருந்தனர். சுப்பரமணி பட்டதாரி ஆசிரியர் நன்றியுரை நல்கினார் இப்பயிற்சி முகாமில் கொரட்டி,அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிந்தூரா ஆபத்துக் காலங்களில் முதலுதவி,மருத்துவ சேவை மற்றும் சுகாதாரம் பேணுதல் குறித்து எடுத்துரைத்தார். இந்திய ரெட் கிராஸ் திருப்பத்தூர் அமைப்பாளர் தேவராஜன் மற்றும் துணை அமைப்பாளர் மணி ஆகியோர் ரெட் கிராஸ் சங்க தோற்றம் செயல்பாடுகள் சேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். துரை மணி ஊர் காவல் படை ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர்கள் உறுப்பினர்கள் சேவை மனப்பான்மையுடன் ஆபத்துக் காலங்களில் செயல்படுவது சார்ந்து பற்றி எடுத்துரைத்தார். இப் பயிற்சி முகாமில் 150 கன்வீனர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிட தக்கது
Tags:    

Similar News