குடும்பத் தகராறில் பூச்சி மருந்து குடித்து ஒருவர் பலி
கள்ளக்குறிச்சியில் குடும்பம் தகராறில் பூச்சி மருந்து குடித்து ஒருவர் பலி.;
Update: 2024-04-12 05:07 GMT
பலி
கள்ளக்குறிச்சி அடுத்த ஈயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணிகண்டன், 38; இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சில வாரங்களாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் கடந்த 10ம் தேதி இரவு பூச்சி மருந்து குடித்தார். உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இறந்தார். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.