பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
மெஞ்ஞானபுரம் அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து பனையேறும் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-03 06:41 GMT
பலி
நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் காமராஜ் (45). பனையேறும் தொழிலாளியான இவர் நேற்று தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வேப்பங்காடு கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பனை மரத்தில் ஏறும்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மெஞ்ஞானபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.