டூவீலர் மோதியதில் ஒருவர் படுகாயம்

கரூர் - திருச்சி சாலையில் மூல காட்டனுர், பெட்ரோல் பங்க் டூவீலர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.;

Update: 2024-05-15 11:37 GMT

கரூர் - திருச்சி சாலையில் மூல காட்டனுர், பெட்ரோல் பங்க் டூவீலர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது. 

 கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, மேலப்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஷோபனா. மே 12 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் ,கரூர் - திருச்சி சாலையில் மூல காட்டனுர், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே சாலையில் வேகமாக வந்த ஒரு அடையாளம் தெரியாத டூவீலர், நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

Advertisement

இந்த விபத்தில் அடையாளம் தெரியாத நபருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ஷோபனா அளித்த புகாரின் பேரில்,சம்ப இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த டூவீலர் எது? அந்த டூ வீலரை ஓட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News