வாகன மோதிய விபத்தில் ஒருவர் பலி!
வாகன மோதிய விபத்தில் ஒருவர் பலி. போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை.;
Update: 2024-05-01 14:47 GMT
பலி
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரம் நகரில் சாலையில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த சின்னழகு (57) என்பவர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த சம்பவத்தில் சின்னழகு பலியானார். இதனையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.