பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி
போளூர் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Update: 2024-06-27 16:45 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வசூரில் குணாளன் பழக்கடை நடத்தி வந்தார். இன்று போளூரில் உள்ள வீட்டுக்கு வந்த குணாளன் உணவு சாப்பிட்டுவிட்டு கடைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வசூர் அருகே சென்ற போது பைக் மீது அரசு விரைவுப் பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த குணாளன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போளூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.