பாரதிதாசன் பல்கலைதுணைவேந்தருக்கு ஓராண்டு பதவி நீடிப்பு

பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தா் ம. செல்வத்துக்கு ஓராண்டு பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-05 08:42 GMT

பாரதிதாசன் பல்கலைக்கழகம் 

பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தா் ம. செல்வம், கடந்த 2021 பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்டாா். அழகப்பா பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வந்த இவா், பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிவடையும் நிலையில்,

இவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு செய்து தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி உத்தரவிட்டுள்ளாா். இதற்கான தகவலை, பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினா்களிடம் துணைவேந்தா் தெரிவித்துள்ளாா்.

பணி நியமனம் முடிவடையும் 2 நாள்களுக்கு முன்னதாகவே பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News