வரத்து அதிகரிப்பால் வெங்காயத்தின் விலை சரிவு!
கோவை:தமிழகம் முழுவதும் கடந்த வாரம் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் தற்பொழுது வரத்து அதிகரித்து இருப்பதன் காரணமாக வெங்காய விலை குறைந்து வருகிறது.
By : King 24x7 Angel
Update: 2024-01-29 10:10 GMT
கோவை:தமிழகம் முழுவதும் கடந்த வாரம் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் போன்றவை 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் தற்பொழுது வரத்து அதிகரித்து இருப்பதன் காரணமாக வெங்காய விலை குறைந்து வருகிறது.கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் வெங்காயத்தின் விலை 20 முதல் 25 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சின்ன வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கும்,பெரிய வெங்காயம் கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக விலை குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.பல்லடம், ராசிபுரம் மற்றும் கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரிப்பதன் காரணமாக படிப்படியாக விலை குறைந்து வருவதாகவும் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் விலை குறையும் என எதிர்பார்ப்பாக வியாபாரிகள் தெரிவித்தனர்.