ஆன்லைன் ஆர்டர்; பழைய பொருட்களை அனுப்பிய நிறுவனம்!
ஆனைமலையை சேர்ந்த வாடிக்கையாளருக்கு பிலிப்கார்ட் நிறுவனம் ஆர்டர் செய்த புதிய காலணிக்கு பதிலாக, மாற்றி பழைய பொருட்களை அனுப்பியுள்ள அவலம் அரங்கேறியுள்ளது.
Update: 2024-01-01 11:32 GMT
பொள்ளாச்சி: ஆனைமலையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு பிலிப்கார்ட் நிறுவனம் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக மாற்றி வேறு ஒரு பொருளை அனுப்பி உள்ளது.
ஆனைமலையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் மாசிலாமணி.இவரது மகன் ஆன்லைனில் புதிய ரக காலானி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.ஆனால் அவருக்கு பிளிப்கார்ட் நிறுவனம் அவர் ஆர்டர் செய்த புதிய காலணிக்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட பழைய ஆண்கள் காலணி ஒன்றும் பெண் அணியும் செருப்பு ஒன்றையும் அனுப்பி உள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை ஆர்வமுடன் பிரித்துப் பார்த்த சமூக ஆர்வலரின் மகன் அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து பிலிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகிய கேட்டபோது உரிய பதில் கிடைக்காததால் ஆன்லைனில் ஆர்டர் செய்த நபர் பெருத்த ஏமாற்றம் அடைந்தார்.