மோட்டார் வாகனங்களுக்கு ஆன்லைன்அபராதம் - கைவிட கோரிக்கை

மோட்டார் வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை கைவிட தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2024-02-05 04:08 GMT

மாநில நிர்வாகிகள் கூட்டம் 

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மோட்டார் வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை கைவிட தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆன்லைன் இ-ரசீது கட்டும் முறையில் வாகன முன்னாள் உரிமையாளர்களுக்கு ஓடிபி சென்று அதில் வரும் நம்பரை பதிவு செய்து பிறகே அபராதம் நீக்கம் செய்யப்படுவதில், பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது. எனவே ஆன்லைன் அபராதம் முறையை கைவிட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மோட்டார் வாகன தொழில் செய்பவர்களை ஒன்றிணைத்து, சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம் என சங்கத்தின் மாநில தலைவர் அறிவழகன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News