சாரண சாரணீய உறுப்பினர்களுக்கான இணையவழி பதிவேற்றப் பயிற்சி முகாம்

சாரண சாரணீய உறுப்பினர்களுக்கான இணையவழி பதிவேற்றப் பயிற்சி முகாம்

Update: 2024-03-23 16:21 GMT

பயிற்சி முகாம் 

சாரண சாரணீயர்கள் மற்றும் சாரண ஆசிரியர்களின் விபரங்களை சாரண இயக்கத் தேசியத்தலைமையக தளத்தில் இணையவழி பதிவேற்றம் செய்வதற்கான பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சாரண இயக்க மாவட்டப் பயிற்சித்திடலில் நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறையில் பயிலும் மாணவர்களுக்கு EMIS எண் வழங்கப்படுவதைப்போல சாரண இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேசியத்தலைமையகத்தால் BSG UID என்ற ஒன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக தேசியத்தலைமையகத்தின் வலைதளத்தில் சாரண சாரண இயக்கத்தின் பிரிவுகளில் கே.ஜி வகுப்புகளுக்கான முயல்குட்டிகள், தொடக்க நிலை வகுப்புகளுக்கான குருளையர் மற்றும் நீலப்பறவையர், உயர்நிலை வகுப்புகளுக்கான சாரணர் மற்றும் சாரணீயர், மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான திரிசாரணர் மற்றும் திரிசாரணீயர் படைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களது படைகளின் பொறுப்பாசிரியர்களது விபரங்களை பதிவேற்றம் செய்வதற்கான பயிற்சி முகாம் பயிற்சித்திடல் செயலாக்கக் குழுமச்செயலர் க.சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டச்செயலர் சீ.ரகோத்தமன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை ஆணையர் ப.மகேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சி முகாமினைத் துவக்கி வைத்து சாரண இயக்கச்செயல்பாடுகள் குறித்தும் மாவட்டப்பயிற்சித்திடலில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணியம் (தொடக்கக்கல்வி),இரா.இரவிச்சந்திரன்,(இடைநிலைக்கல்வி), ப.கணேசன்(தனியார்பள்ளிகள்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாமக்கல் மாவட்டத்தின் அனைத்துவகை பள்ளிகளில் இருந்தும் சுமார் 70 சாரண சாரணீய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு மாவட்டச்செயலர் து.விஜய் இப்பயிற்சியை நடத்தினார். அமைப்பு ஆணையர் திருமதி.ப.சுமதி நன்றி கூறினார்.இம்முகாமிற்கான ஏற்பாடுகளை பயிற்சி ஆணையர்கள் திரு.சேவியர் பிரின்ஸ்,திருமதி.இரா.கவிதா, திருமதி.ப.ஜெயந்தி,திரு.விஜயகுமார்,திரு.சத்தார் பாஷா ஆகியோர் அடங்கிய குழு சிறப்பாகச் செய்திருந்தது.

Tags:    

Similar News