பாஜக அலுவலகம் திறப்பு

காருடையாம்பாளையத்தில், புதிய பாஜக அலுவலகத்தை மாவட்ட தலைவர் செந்தில்நாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

Update: 2024-01-23 03:55 GMT

கரூர் - கோவை சாலையில் உள்ள, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காருடையாம்பாளையம் பகுதியில், பாரதிய ஜனதா கட்சியின் க. பரமத்தி வடக்கு மண்டல புதிய அலுவலகத்தை பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். தொடர்ந்து அலுவலகத்தில் பூஜை செய்து "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்பினர்.

கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் செந்தில்நாதன். மேலும், புதிய அலுவலகத்தின் முன்பு அமைக்கப்பட்ட புதிய கொடி கம்பத்தில், கட்சி கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் செல்வி பழனிச்சாமி, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் செல்வம், பட்டியல் இன மாவட்ட தலைவர் தங்கதுரை, மாவட்ட விவசாய அணி தலைவர் செல்வம், அரவக்குறிச்சி தொகுதி அமைப்பாளர் மருத்துவர் ராமச்சந்திரன், அரவக்குறிச்சி இணை செயலாளர் செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கட்சி அலுவலக திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News