பாசன வசதிக்காக சின்னாறு அணை திறப்பு
சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 23-24 ஆம் ஆண்டிற்கான பாசன வசதிக்காக மாவட்ட ஆட்சியர் அணையை திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டம் பஞ்சப் பள்ளி அருகே உள்ள சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 23-24 ஆம் ஆண்டிற்கான விவசாயிகள் பயன் பெரும் வகையிலும், குடிநீர் தேவைக்காகவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று அணையை பூஜை செய்து திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றார். இன்று முதல் 105 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் பஞ்சப் பள்ளி, சாமனூர், அத்தி முட்டுலு, மாரண்டஅள்ளி, பாலக்கோடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் இன்று திறந்துவிடப்படும் நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சலை பெற்று பயன்பெருமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் உதவி செயற்பொறியாளர் பாபு, சாம்பராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பாசன விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.