ராசிபுரம் அருகே திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
ராசிபுரம் அடுத்த வெண்ணந்துர் அத்தனூர் பகுதியில் இந்தியா கூட்டணியின் திமுக தேர்தல் அலுவலகம் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார் அப்போது அத்தனூர் பகுதியில் தேர்தல் பணிமனை திறந்து வைத்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரே தேர்தல் பத்திரங்களை வைத்து மோசடி செய்த பாசிச பாஜக அரசு அகற்றப்பட வேண்டும்.
அதேபோல் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் போது பாஜக அரசு மீண்டும் வெற்றி பெறக் கூடாது என்றும் இந் நிலையில் இந்தியா எல்லாவற்றையும் தாண்டி நமது கூட்டணியின் பல்வேறு வேற்றுமை இருந்தாலும்,
இன்று நாம் ஒற்றுமையோடு இருக்கும் வகையில் அதேபோல் கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் நாம் இன்று ஒற்றை எண்ணத்துடன் பாஜக அரசு அகற்ற வேண்டும் ஒரு சிறந்த பிரதமரை கொண்டு வர வேண்டும் அனைத்து மக்களை சார்ந்த ஒன்றிய அரசகாக இருக்க வேண்டும்,
என்று இதனால் இந்திய கூட்டணி கட்சிகள் சார்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.இதில் ஒன்றிய குழு உறுப்பினர் ஆர் எம் துரைசாமி, பொருளாளர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பாலசந்தர்,அத்தனூர் தலைவர் கண்ணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சேகர், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.