மயிலாடுதுறையில் ரூ.2 கோடியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் திறப்பு

மயிலாடுதுறையில் ரூபாய் 2 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திந்து வைத்தார்.

Update: 2024-01-06 11:20 GMT

நூலகம் மற்றும் அறிவு சார் மையம் 

மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் . ராஜ்குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மயிலாடுதுறையில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் அமைந்துள்ள சிறப்பு அம்சங்களாக, 2322 புத்தகங்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 11 எண்ணிக்கையில் கணிணியும் அதற்கான இணையதள வசதியும் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அமர்ந்து படிக்கும் வண்ணம் மேஜை, நாற்காலி வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு எண்ணிக்கை தீ தடுப்பு சாதனக் கருவி பொறுத்தப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வருவதற்கு சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. சிறார்களுக்கான தனி இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ளும் வகையில் போட்டி தேர்வர்களுக்கு பயிற்சியுடன் கூடிய பயிலரங்கம் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் படித்து பயன்படுபவர்கள் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து மேம்படுத்திடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் .உமாமகேஸ்வரி சங்கர் , மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் .காமாட்சி மூர்த்தி , மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் அவர்கள், நகராட்சி செயற்பொறியாளர் மகாதேவன் மற்றும் நகர்மன்ற குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News