விவசாய சங்க கூட்டு இயக்கத்தின் புதிய கிளை திறப்பு
சங்ககிரி அருகே தண்ணீர்தாசனுர் பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் புதிய கிளை திறக்கப்பட்டது.;
Update: 2024-01-22 12:49 GMT
சங்ககிரி அருகே தண்ணீர்தாசனுர் பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் புதிய கிளை திறக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தண்ணீர்தாசனுர் பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் புதிய கிளை அலுவலகம் மாநிலத் தலைவர் கோபாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து சிறப்பித்தார். அப்போது விவசாயிகளின் நலன் காக்க தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் துவங்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் மாநில தலைவர் கோபாலகிருஷ்ணன் பேசினார் .அப்போது சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி என்கின்ற தேவராஜ், செயலாளர் மகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் உடன்னிருந்தனர்.