கள்ளக்குறிச்சியில் ராம்ராஜ் காட்டன் கடை திறப்பு

கள்ளகுறிச்சியில் ராம்ராஜ் காட்டன் கடை திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-04-27 03:21 GMT
ராம்ராஜ் காட்டன் கடை திறப்பு

தென் மாநிலம் முழுதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்து வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம், சேலம் - சென்னை மெயின் ரோடு, கள்ளக்குறிச்சி தச்சூரில் புதிய கிளை அமைத்து, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி சத்யா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி புதிய ஷோரூமை திறந்து வைத்தார். தச்சூர் ஊராட்சித் தலைவர் மல்லிகா அண்ணாதுரை, அம்மன் சப்ளையர்ஸ், அண்ணாதுரை ஆகியோர் குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். வேகம் பிஸ்னஸ் சொலிஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெற்றிவேல் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.

ராம்ராஜ் காட்டன் ஷோரூம்களில் அட்ஜஸ்டபிள் வேட்டி, பேன்சி பார்டர் வேட்டி, கறை படியாத வேட்டி, நறுமண வேட்டி, முகூர்த்த வேட்டி, எம்ராய்டரி வேட்டி, மயில்கண் வேட்டி, பஞ்ச கச்ச வேட்டி, பட்டு வேட்டி, மன வேட்டி ரகங்கள் மற்றும் ஏராளம் காட்டன் சர்ட்டுகள், எம்ராய்டரி சர்ட்டுகள், பிரிண்ட் சர்ட்டுகள், காட்டன் சர்ட்டுகள் உள்ளிட்ட பலவகையான சர்ட்டுகள் கிடைக்கிறது. இப்போது ராம்ராஜ் நிறுவனம் பெண்களுக்கு என்று காட்டன் சேலைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கான தனி பிரிவுகள் துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News