கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனத்தின் 121-ஆவது கிளை திறப்பு
கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனத்தின் 121-ஆவது கிளை திறப்பு விழா நடைபெற்றது.
Update: 2024-04-08 02:58 GMT
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனத்தின் 121-ஆவது கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனத்தின் 121-ஆவது கிளை கும்பகோணம் அருகே பந்தநல்லூா் பெருமாள் கோயில் தெற்கு வீதியில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. கிளையை நிறுவனத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். கல்யாணசுந்தரம் திறந்து வைத்தாா். நிறுவனத் துணைத் தலைவரும், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினருமான செ. ராமலிங்கம், இயக்குநரும், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சாக்கோட்டை க. அன்பழகன், மேலாண் இயக்குநா் பி.ஆா்.பி. வேலப்பன், இயக்குநா்கள் பி. பிரகாசம், ஜி. துரைராஜ், இ. அம்பிகா, எம். குரு பிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.