பள்ளிவாசல் திறப்பு

கீழக்கரையில் அல் - மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி திறப்பு விழா நடந்தது.

Update: 2024-03-11 09:29 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலை இம்பாலா சுல்த்தான் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் அல் - மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு காஜி வி. வி. எ. சலாஹுத்தீன் ஆலிம் உமரி தலைமையில் அனைத்து ஜமாத்துகள் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் முன்னிலையில் பள்ளியை திறந்து வைத்தனர். அல்-மஸ்ஜிதுர் ரய்யான் இமாம் M.பஷீருதீன் ஆலிம் ஹைரி இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார். யூசுப் சாகிப் ஆலிம் ஹாமீதி வரவேற்புரை வழங்கினார். கீழக்கரை வட்டாச்சியர் பழனிக்குமார் , மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம் கே. இ. உமர் , இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் சுந்தரம் , திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியை ஜஹாங்கீர் அரூஸி தொகுத்து வழங்கினார். அல்-மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி நிறுவனர் சுல்த்தான் செய்யது இப்றாஹி நன்றியுரை கூறினார். கீழக்கரை சார்ந்த அனைத்து ஜமாத்தார்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News