பாரம்பரிய பொருட்கள் விற்பனை நிலையம் திறப்பு !

காரைக்குடியில் பாரம்பரிய பொருட்களின் விற்பனை நிலையம் பாரத பிரதமர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2024-03-13 12:14 GMT

விற்பனை நிலையம்

காரைக்குடி ரயில்வே சந்திப்பில் "ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு, என்பதன் அடிப்படையில், பாரம்பரிய பொருட்கள் விற்பனை நிலையத்தை காணொளி காட்சி மூலம் பாரத பிரதமர் திறந்து வைத்தார். விளிம்பு நிலை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழகமெங்கும் 45 ரயில் நிலையங்களில், அந்தந்த ஊர்களின் பெருமைகளை அடையாளப்படுத்தும் பொருட்களின் விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் என்ற மத்திய அரசின் திட்டம் இன்று தமிழக முழுவதும் , 39 ரயில் நிலையங்களில் மொத்தம் 45 ஸ்டால்கள் தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில்வே சந்திப்பில் செட்டிநாடு உணவு வகைகளான, நெய் முருக்கு, சீப்பு சீடை, தேன்குழல், மாவுருண்டை, அதிரசம் போன்ற பல் சுவை உணவு பொருட்கள் விற்பனை நிலையத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த விற்பனை நிலையத்தின் மூலம் உள்ளூரில் தயாரிக்கப்படும் தனித்துவம் வாய்ந்த பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்பதால், இரயில் பயணிகளுக்கு இந்த விற்பனை நிலையங்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News