கடனாநதி, இராமநதி அணைகளில் நீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
Update: 2023-11-19 04:02 GMT
இராமநதி அணை
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடனாநதி மற்றும் இராமநதி அணைகள் அமைந்துள்ளன.இந்த இரு அணைகளும் முழு கொள்ளவை எட்டும் நிலையில் பாசன சாகுபடிக்காக நாளை முதல் 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடனா நதி அணையில் இருந்து 125 கன அடி நீரும், இராமந்தி அணையில் இருந்து 60 கன அடி நீரும் திறக்கப்படுவதால் 9,923 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.