தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்றாக பிரிக்க எதிர்ப்பு

தமிழ்நாடு மின்வாரியத்தை 3 நிறுவனங்களாக பிரிப்பதற்கு தமிழக அரசு அனுமதித்து வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-04 05:08 GMT

ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாடு மின்வாரியத்தை தமிழ்நாடு பவர் டிஸ்ட்ரிபியூஷன் கார்பரேசன், தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்பரேசன், தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்பரேசன் என பிரிப்பதற்கு அனுமதித்து, தமிழக அரசு ஜனவரி 24-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இவ்வாறு பிரிப்பதன் மூலம் மின்வாரிய தொழிலாளர்கள், பொதுமக்கள் இரண்டு தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படும் என குற்றஞ்சாட்டி, அந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் டிஎன்இபி எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சங்கத்தின் திட்ட உபதலைவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி கோட்டங்களைச் சேர்ந்த மின்சாரத் தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News