சிவகாசி அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு
சிவகாசி அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தினர்.
சிவகாசி அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்புவீடுகளில் கருப்பு கொடி கடடி கிராம மக்கள் போராட்டம்.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மகாத்மா காந்தி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் தெருக்களில் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி அருகே சாமிநத்தம் ஊராட்சி மகாத்மா காந்தி நகரில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அங்கு குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியார் இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்காக பணி துவங்கியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியினர் தெருக்களில் ஆங்காங்கே கருப்புக் கொடிகளை கட்டினர்.
போலீசார்,வருவாய் துறையினர் அப்பகுதி மக்களிடம்,செல்போன் டவர் அமைப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து செல்போன் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.தற்போது மீண்டும் டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.
அதனை தொடர்ந்து அந்த பகுதி குடியிருப்புவாசிகள்,செல்போன் டவர் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் எனக் கூறி வீடுகளில்,தெருக்களில் கருப்புக் கொடியை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கையில் கொடியுடன் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.