படுகொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு ஓ பி எஸ் அணியினர் ஆறுதல்
மைலோடு புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வரவு செலவு கணக்கு கேட்டதால் படுகொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் குடுமபத்தினரை சந்தித்து ஓபிஎஸ் அணியினர் ஆறுதல் தெரிவித்தனர்.
Update: 2024-01-23 05:39 GMT
கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வரவுசெலவு கணக்கு கேட்ட காரணத்தினால் திமுக தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு என்பவர் தலைமையிலான கும்பலால் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய தலைவர் சேவியர் குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். சம்மந்தப்பட்ட ஆலய பாதிரியார் இல்லத்தில் வைத்து கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சேவியர்குமார் குடும்பத்தாரை ஒ பிஎஸ் அணி கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் செல்லப்பன் , மாநில இலக்கிய அணி இணை செயலாளர் ச.வீரவேணாடன்ராஜா , மாவட்ட சிறுபாண்மை அணி மாவட்ட செயலாளர் ஜகபர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தகுந்த தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவும், மறைந்த சேவியர் குமார் குடும்பத்திற்கு 5 கோடி இழப்பீடு வழங்கவும், அவருடைய மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.