ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி மாவட்ட ஓபிஎஸ் வழக்கறிஞர் அணி செயலாளர் செல்வம் கிறிஸ்டோபர் அதிமுகவில் இணைந்தார்.;

Update: 2024-02-08 15:22 GMT

அதிமுகவில் இணைவு 

ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அவரது அணியில் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளராக பணிபுரிந்தவருமான வழக்கறிஞர் செல்வம் கிறிஸ்டோபர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி அதிமுகவின் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன்-ஐ அவரது அலுவலகத்தில் சந்தித்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

Advertisement

அவருடன் ஓபிஎஸ் வழக்கறிஞர் அணி பொருளாளர் வக்கீல் ஸ்ரீராம் பிரபு மற்றும் பேச்சிமுத்து லிங்கா மகேஷ் நாகராஜ் கற்பகவல்லி தமிழ்செல்வன் பொன் குட்டி ராஜா போன்ற வழக்கறிஞர்களும் அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வின் போது அதிமுக அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர், மாநகராட்சி எதிர்க்கட்சி கொரடா வக்கீல் மந்திரமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், வக்கீல் அணி மாவட்ட இணை செயலாளர் முனியசாமி, வட்டச் செயலாளர் தூத்துக்குடி மணிகண்டன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News