ஓபிஎஸ் அணியினர் ஆலோசனை கூட்டம் - ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

Update: 2024-02-10 09:11 GMT

ஓபிஎஸ் அணியினர் ஆலோசனை கூட்டம்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் இணை ஒருங்கினைப்பாளர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன், கொள்கைபரப்பு செயலாளர் மருது அழகுராஜ், அமைப்பு செயலாளர் மஞ்சுளா மற்றும் ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் ஓ.பன்னீர்ச்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் திமுக பொருப்பேற்று மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை என்றும், ஒரே நாடு, ஒரே தேர்தலில் ஒரு சில விதிமுறைகளை ஏற்கவில்லை என அம்மாவே சொல்லியிருக்கிறார்கள் என்றும், கூட்டணி கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசித்து தொகுதிகள் குறித்து அறிவிப்போம் என பேசியதுடன், அதிமுகவின் கொடி, சின்னத்தை நான் பயன்படுத்தக்கூடாது என்றே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொண்டர்களுக்கு அல்ல. கொடியை பயன்படுத்த தடைவிதிக்கலாம் ஆனால் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் அதனை மாற்ற முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் எந்த தேர்தல் வந்தாலும் எங்கள் அணி இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என தெரிவித்த அவர், நான்கரை ஆண்டுகள் பா.ஜ.க ஆதரவோடு ஆட்சி செய்துவிட்டு ஒரே வாரத்தில் கூட்டணியை முறித்தது துரோகம் என்றும், என்ன காரணம் என கூற வேண்டும்? என்றும், ஒவ்வொருவருக்காக துரோகம் இழைத்துவரும் எடப்பாடி பழனிச்சாமியின் உட்சபட்ச துரோகம் இது என்றும் பேசினார்.
Tags:    

Similar News