ஆரஞ்சு அலர்ட் : படகுகளை பாதுகாப்பாக நிறுத்த எஸ்பி வேண்டுகோள்

இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்ததை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள்,மற்றும் பொது மக்களுக்கு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .

Update: 2024-05-05 07:53 GMT

மாவட்ட காவல் அலுவலகம் 

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய காற்று வீசக்கூடும், கடல் கொந்தளிப்புடன் 1.5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். கரையோரம் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கடலலில் பொதுமக்கள் யாரும் குளிக்க செல்ல வேண்டாம். காற்றின் வேகத்தால் படகுகள் சேதமடையக்கூடும் என்பதால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ கிராமங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுஙாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைபடகு மற்றும் ஆழ்கடல் மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் கரையோர மீன்பிடி தொழிலும் இன்றுடன் நிறுத்தப்பட்டது. இதனால் அடுத்த அறிவிப்பு வரும் வரை மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News