திண்டுக்கல் : இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கம்
இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கில் ஆர்வமுடன் விவசாயிகள் கலந்து கொண்டனர்.;
Update: 2023-11-28 05:40 GMT
இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயிகள்
திண்டுக்கல் வட்டாரம் பெரிய கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 30 விவசாயிகளுக்கு பிரண்ட்ஸ் ஆப் ஃபார்மர் வெல்ஃபேர் டிரஸ்ட் மற்றும் உழவன் நண்பர்கள் கிராமிய இயற்கை விவசாய குழு மூலம் இயற்கை விவசாயம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் இயற்கை விவசாய ஆலோசகர் குமார், முன்னோடி விவசாயி பகவதி உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து உயிரியல் பூஞ்சனா கட்டுப்பாடு மருந்து 30 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.