ராணிப்பேட்டையில் கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை வேளாண் பயிற்சி
ஏ.பி.ஜே. அறக்கட்டளையின் பசுமை திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை வேளாண் பயிற்சி நடந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-23 15:16 GMT
சான்றிதழ் வழங்கல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏ.பி.ஜே. அறக்கட்டளையின் பசுமை திட்டத்தின் மூலம் தனியார் கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை சார்ந்த வேளாண் தோட்டக்கலை பயிற்சி வகுப்பு கள் நடத்தப்பட்டன.
இதற்கு அறக்கட்டளையின் தலைவர் கோபி தலைமை தாங்கினார். பயிற்சி பெற வந்த மாணவிகள் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
பயிற்சி வகுப்புகளை நிறைவு செய்த மாணவிக ளுக்கு ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பி ரண்டு பிரபு, ஆற்காடு இன்ஸ்பெக்டர் சசிக்குமார் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.