நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் திட்டம் விழிப்புணர்வு பிரச்சாரம்
நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் திட்டம் விழிப்புணர்வு பிரச்சாரம்
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் திட்டம் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியது. நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம், மாவட்ட முன்னோடி வங்கி, நபார்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளின் சார்பில், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பரளி கிராமத்தில், விவசாயிகளுக்கு, நெல் வயல்களில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. மேலும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் சார்பில் பிரதம மந்திரியின் உஜ்வாலா எரிவாயு இணைப்பு மற்றும் ஆதார் முகாமும் நடைபெற்றது. இதில் மோகனூர் வட்டாரத்திற்குட்பட்ட , மாடகாசம்பட்டி, பரளி, ஆகிய 3 இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது