கொடைக்கானல் மலைச்சாலையில் கவிழ்ந்து விபத்து: 21பேர் படுகாயம்
கொடைக்கானல் மலைச்சாலையில் கவிழ்ந்து விபத்துகுள்ளனதில் 21பேர் படுகாயம் அடைந்தனர்.
திருமண நிகழ்விற்கு சென்று திரும்பிய வேன் கொடைக்கானல் மழைச்சாலையில் கவிழ்ந்து விபத்து. வேனில் பயணித்த ஓட்டுனர் உட்பட 21 ஆண்கள் படுகாயம். காயமடைந்தவர்களில் 18 நபர்கள் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் 3 நபர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கபட்டுள்ளனர்.
விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் இருந்து கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கிராமத்திலிருந்து ஒரு பேருந்து மற்றும் ஒரு வேனில் 80க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.
இதில் பேருந்தில் பெண்களும், வேனில் 20 ஆண்களும் சென்றுள்ளனர். மேலும் திருமண நிகழ்வு முடிந்த பின் மாலையில் பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்திற்கு திரும்புகையில் டிரைவர் உட்பட 21 ஆண்கள் வந்த வேன் டம் டம் பாறை அருகே வளைவில் திரும்புகையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் காயம் அடைந்த 21 நபர்களையும் 108 அவசர ஊர்தி மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவரையும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 21 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் கட்டுப்பாட்டை இழந்த வேன் நல்வாய்ப்பாக சாலையின் இடதுபுற மலை பக்கம் கவிழ்ந்ததால் உயிர் இழப்பு இல்லாமல் படுகாங்களுடன் தப்பித்துள்ளனர்.